அத்தியாயம் 3 – ஷ்யாமளாவின் சிந்தனைகள்
ஷ்யாமளா ரயிலிருந்து, பசுமையான காட்சிகளையே ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு கவலை அவளை வருந்தியது போல இருந்தது.
"யார் இவன், ஏன் என்னை அப்படி பார்க்கறான்? ரொம்ப அசடு வழியாரானே? நாற்பது வயசுக்கு மேல் இருப்பான் போல. கல்யாணம் கூட ஆயிருக்கோம். தெரியல?"
"அவன் என்னை பார்க்கிறதே எனக்கு தெரிகிறது, ஆனால் இதை நான் என்னை அறியாமலா ரசிக்கறேனா இல்லை என்ன நாணம் இதை வெறுக்கிறதா?" தெரியலை.
அப்போது, அம்மா, ராஜேஸ்வரி, "கற்பகாம்பாள் பங்குனி உத்திரம் தரிசனம் எவ்வளவு அழகா இருந்தது இல்லைய, அம்பாள் அலங்காரம் ரொம்ப அழகா இருந்தது". "ஷ்யாமளா, நீ நாதஸ்வர விதுவான், கும்பகோணத்தில வசிப்பாரே, அவர்தான்..."

No comments:
Post a Comment